ADDED : ஏப் 12, 2024 04:21 AM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஸ்கூட்டர் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி, ராஜாநகரை சேர்ந்தவர் மாரப்பன் மகன் தமிழ்செல்வன்,35; ரைஸ்மில் இன்ஜினியர். இவர், கடந்த 4ம் தேதி இரவு தனது தனது ஸ்கூட்டரை (டி.என் 30 பிக்யூ7902) வீட்டிற்கு முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்த போது ஸ்கூட்டரை காணவில்லை.
தமிழ்செல்வன் புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த கிருபாகணேசன், 42; என்பவர் ஸ்கூட்டரை திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
