ADDED : ஜூலை 16, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சாரண, சாரணியர் இயக்க துவக்க விழா நடந்தது.
திருக்கோவிலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடந்த சாரண, சாரணியர் இயக்க துவக்க விழாவிற்கு, மாவட்ட கல்வி அலுவலர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் குமுதவள்ளி வரவேற்றார்.
திருக்கோவிலுார் சாரண, சாரணியர் மாவட்ட அமைப்பு ஆணையர் வெங்கடேசன் பங்கேற்று, இயக்கத்தை துவக்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார். பயிற்சியின் அவசியம் குறித்து ஆசிரியர்கள் நாகமணி, விமலா, தில்ஷாத், அந்தோணியம்மாள், மேரி ஜாய், அருள்குமாரி உரையாற்றினர். ஆசிரியர் மாலதி நன்றி கூறினார்.
