/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு 'சீல்' நகராட்சி நிர்வாகம் அதிரடி
/
வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு 'சீல்' நகராட்சி நிர்வாகம் அதிரடி
வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு 'சீல்' நகராட்சி நிர்வாகம் அதிரடி
வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு 'சீல்' நகராட்சி நிர்வாகம் அதிரடி
ADDED : பிப் 26, 2025 05:18 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில், முறையாக வாடகை செலுத்தாத, 8 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் 'சீல்' வைத்துள்ளது.
திருக்கோவிலுார் நகராட்சிக்கு சொந்தமாக 158 கடைகள் உள்ளன. இந்த கடைகளில், மாத வாடகை அடிப்படையில் தனிநபர்கள் பல்வேறு தொழிலகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலானோர் மாதா மாதம் வாடகை செலுத்தி விடுகின்றனர். ஆனால் ஒரு சில கடைகள், முறையாக வாடகை செலுத்துவதில்லை.
இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பலமுறை கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் வாடகை செலுத்தவில்லை. இந்நிலையில் அந்த கடைகளை பூட்டி சீல் வைக்க நகராட்சி திட்டமிட்டது.
இந்நிலையில் நகராட்சி ஆணையர் திவ்யா, வருவாய் ஆய்வாளர் திருச்செல்வி, அலுவலக உதவியாளர்கள் செந்தில்குமார், சரவணன் உள்ளிட்ட ஊழியர்கள், 8 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். நகராட்சியில் வளர்ச்சிப் பணி திட்டங்களை செயல்படுத்த, கடை வாடகை, குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் முறையாக செலுத்தி, நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.