/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் 300 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் 300 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் 300 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் 300 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஏப் 21, 2024 06:06 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங்' ரூமுக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), ஆத்துார் (தனி), கெங்கவல்லி (தனி), ஏற்காடு (எஸ்.டி.,) ஆகிய 6 சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த 12 லட்சத்து 42 ஆயிரத்து 24 பேர் ஓட்டினை பதிவு செய்தனர். 79.18 சதவீத ஓட்டுகள் பதிவானது.
தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையமான அ.வாசுதேவனுார் மகாபாரதி பொறியியல் கல்லுாரிக்கு நேற்று காலை வரை கொண்டு வரப்பட்டது.
அங்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில், 'ஸ்ட்ராங்' ரூமுக்கு கொண்டு செல்லப்பட்டு, 'பூத்' வாரியாக அடுக்கி வைக்கப்பட்டு, வேட்பாளர்கள் முன்னிலையில் ரூமுக்கு சீல் வைக்கப்பட்டது.
தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் கார்க், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், எஸ்.பி., சமய்சிங்மீனா, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் உடனிருந்தனர்.
ஒரு கட்டடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிக்கும், மற்றொரு கட்டடத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிக்கும் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 'ஸ்ட்ராங்' ரூமுக்கும் 3 பூட்டுகள் போடப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது. கட்டடத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 300 சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது.
'ஸ்ட்ராங்' ரூமுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவபடை வீரர்கள் 30 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் 50 பேரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூர் ஆயுதப்படை மற்றும் தாலுகா போலீசார் 150 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 5 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு டி.எஸ்.பி., தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டடத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

