/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
/
ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
ADDED : ஏப் 14, 2024 06:16 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த பயிற்சிக்கு, ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமை தாங்கினார். தாசில்தார் பிரபாகரன், தேர்தல் துணை தாசில்தார் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். மண்டல அலுவலர் சுந்தரம் பயிற்சி அளித்தார்.
முகாமில், தேர்தல் தினத்தன்று ஓட்டளிக்க வரும் வாக்காளரின் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். வாக்காளர் கொண்டு வரும் ஆவணத்தை சோதனை செய்ய வேண்டும்.
இயந்திரங்களை இணைக்கும் விதம், படிவம் நிரப்பும் முறை, ஓட்டுப்பதிவினை பாலினம் வாரியாக கணக்கெடுக்கும் விதம், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பதிவான ஓட்டுகளின் சதவீதம் தெரிவிக்க வேண்டும். ஓட்டுப்பதிவு முடிந்ததும் 'சீல்' வைக்கும் முறை உட்பட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி கூறி பயிற்சி அளிக்கப்பட்டது.தொடர்ந்து பயிற்சியின் போது, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு மாதிரி விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. முகாமில், 1,703 ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

