/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரிகள் பறிமுதல்
/
கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரிகள் பறிமுதல்
ADDED : ஜூலை 25, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தாலுகா மேப்புலியூர் அருகே கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.
அதன் பேரில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் பொன்னுசாமி தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கூழாங்கற்கள் கடத்தி வந்த இரு டிப்பர் லாரிகளை மடக்கி பிடித்தனர். டிரைவர்கள் தப்பினர். டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து உளுந்துார்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிந்து டிப்பர் லாரி உரிமையாளர் கடலுார், புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகத்திடம் விசாரித்து வருகின்றனர்.