/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு
/
மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஆக 20, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த நெடுமானுர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் நெடுமானுர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சுனிதா தலைமை தாங்கினார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா தேர்தல் பார்வையாளராக கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினராக உதவி திட்ட அலுவலர் பழனியாபிள்ளை கலந்து கொண்டார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவராக சங்கீதா, துணை தலைவராக தமிழ்செல்வி மற்றும் உறுப்பிணர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

