/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் தேர்வு
/
பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 01, 2024 11:03 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்திற்கு, தலைமை ஆசிரியர் முனியப்பிள்ளை தலைமை தாங்கினார்.
மேற்பார்வையாளர் தனவேலு, ஆசிரியர் பிரதிநிதி கவிதா முன்னிலை வகித்தனர்.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக கிருஷ்ணவேணி, துணைத் தலைவராக கவிதா, கல்வியாளராக சஞ்சய் காந்தி, முன்னாள் மாணவர்கள் மாரியப்பன், ராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதிவி குழுவினர், மாணவர்களின் பெற்றோர், உறுப்பினர்கள் என 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆசிரியர் வடிவேல் நன்றி கூறினார்.