/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டி.எஸ்.எம்., ஜெயின் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு
/
டி.எஸ்.எம்., ஜெயின் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு
டி.எஸ்.எம்., ஜெயின் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு
டி.எஸ்.எம்., ஜெயின் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு
ADDED : மார் 27, 2024 07:36 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., ஜெயின் தொழில்நுட்ப கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், 'செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பயன்பாடுகள்' என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.
டி.எஸ்.எம்., ஜெயின் கல்வி குழும செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். புது டில்லி கல்கோடியாஸ் பல்கலைக்கழக கணினி பேராசிரியர் ராஜேஷ் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தற்கால சூழலில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
உயிரியல், மருத்துவ அறிவியல், மருந்து சேர்க்கைகள், நோய்களைக் கணிப்பது உள்ளிட்ட சிக்கலான பல விஷயங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் சுலபமாக தீர்வு காண்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், பேராசிரியர்கள் சுரேஷ், முகுந்தன், பெரியசாமி, சந்தோஷ்குமார், வீராசாமி, சத்தியசீலன், செல்வரசன், அரவிந்த், ஆர்த்தி, மற்றும் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

