/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செங்குறிச்சி ஊராட்சி தலைவர் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
/
செங்குறிச்சி ஊராட்சி தலைவர் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
செங்குறிச்சி ஊராட்சி தலைவர் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
செங்குறிச்சி ஊராட்சி தலைவர் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
ADDED : செப் 01, 2024 04:37 AM
உளுந்துார்பேட்டை, : செங்குறிச்சி ஊராட்சி தலைவர் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குறிச்சி ஊராட்சியில் 8 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சி நிதியை கையாலுவதிலும், ஊராட்சி பணிகளை மேற்கொள்வதில் ஊராட்சி தலைவர் முருகன் மற்றும் துணைத் தலைவர் அண்ணாமலை இடையே பிரச்னை நீடித்து வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டதால் ஊராட்சி செயலர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஊராட்சி பணிகளை செய்ய விடாமல் தடுப்பதால், எவ்வித பணிகளையும் செய்ய முடியாததால் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக ஊராட்சி தலைவர் முருகன், நேற்று அப்பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் முன் ஊர் மக்கள் முன்னிலையில் அறிவித்தார்.
அவருக்கு ஆதரவாக வார்டு உறுப்பினர்கள் கல்பனா, முருகன், சரோஜா, சிவகவி, மணிகண்டன், சாந்தி ஆகிய 6 பேரும் ராஜினாமா செய்யபோவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் இதுதொடர்பாக பி.டி.ஓ., மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் யாரும் கடிதம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.