ADDED : மே 10, 2024 09:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றபோது, கருணாபுரத்தில் நின்றிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் ஏமப்பேர் ஏழுமலை மகன் ராஜா (எ) ராக்கெட் ராஜா, 25; விருத்தாசலம் நாச்சியார்பேட்டை சங்கர்,38; புதுக்குப்பம் சுப்ரமணியன் மகன் மணிகண்டன்,23; என்பதும், கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர், மோ.வன்னஞ்சூர் மற்றும் உளுந்துார்பேட்டை அடுத்த பரிக்கல் பகுதிகளில் நடந்த திருட்டு சம்பவங்களில் தேடப்படுபவர்கள் என தெரிய வந்தது. அதன்பேரில் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.