/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலையில் கழிவு நீர் பொதுமக்கள் அவதி
/
சாலையில் கழிவு நீர் பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 06, 2024 05:33 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் வழிந்தோடிய கழிவு நீரால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கள்ளக்குறிச்சி காந்தி சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் உட்பட நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இச்சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. பள்ளிக்கு அருகே உள்ள குளத்துமேட்டு தெரு முனை பகுதியில் நேற்று கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வழிந்தோடியது.
அவ்வழியாக அதிவேகமாக சென்ற வாகனங்களால் சாலையில் நடந்து செல்வோர் மற்றும் பைக்கில் செல்வோர் மீது கழிவு நீரை வாரி இறைத்தது. இதனால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுதியான காந்தி சாலையில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அவ்வப்போது கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனை சீரமைக்ககோரி பலமுறை புகார் தெரிவித்தும் தற்காலிக நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை இல்லை.
எனவே, குளத்துமேட்டு தெரு பகுதியில் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பினை சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.