/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாரதா வித்யாஷ்ரம் பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் 'சென்டம்'
/
சாரதா வித்யாஷ்ரம் பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் 'சென்டம்'
சாரதா வித்யாஷ்ரம் பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் 'சென்டம்'
சாரதா வித்யாஷ்ரம் பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் 'சென்டம்'
ADDED : மே 15, 2024 01:20 AM

திருக்கோவிலுார் :'திருக்கோவிலுார்் சாரதா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளி துவங்கப்பட்டு 3 வது ஆண்டாக தொடர் சாதனையாக 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று வருகின்றனர். மாணவர் சூரியநாராயணன் 468, கீர்த்தனா 459, கிதித்இனியன் குமார் 458; மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
அதேபோல் பிளஸ் 2 தேர்வில் முதலாம் ஆண்டில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவி பிரியதர்ஷினி 416, பவஸ்ரீ 376, ரக்சனா 372; மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் கீதா, ஆசிரியர்களை பள்ளி தலைவர் கார்த்திகேயன் பாராட்டி பரிசு வழங்கினார்.