/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டாஸ்மாக்கை இடமாற்றம் செய்யக்கோரி கடையின் கதவு உடைப்பு: சாலை மறியல் உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு

ADDED : பிப் 28, 2025 11:49 PM
உளுந்துார்பேட்டை,; திருநாவலுார் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருநாவலுார் அடுத்த தேவியானந்தல் - சிறுளாப்பட்டு கிராம எல்லைக்குட்பட்ட சாலையோரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது அருந்து விட்டு செல்லும் குடிமகன்களால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால், அந்த கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணியளவில் தேவியானந்தல், சிறுளாப்பட்டு, கிழக்கு மருதுார், சோமாசிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், டாஸ்மாக் கடைக்குச் சென்று, கதவை உடைத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து, உளுந்துார்பேட்டை - கடலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கடையை இடமாற்றம் செய்யப்படும் என உறுதியளித்தனர்.
அதனையேற்று மாலை 3:15 மணியளவில் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.