/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை
/
சங்கராபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை
சங்கராபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை
சங்கராபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை
ADDED : மார் 05, 2025 05:24 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் காவல் நிலையத்தில் காவலர் எண்ணிக்கையை கூடுதலாக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கராபுரத்தில் கடந்த 75 ஆண்டுக்கு முன் காவல் நிலையம் துவங்கப்பட்டது. அப்போதைய மக்கள் தொகை அடிப்படையில் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது, இந்த காவல் நிலையத்தில் 45 போலீசார் மட்டுமே பணி புரிகின்றனர். இவர்களில் பலர் கோர்ட், வழிக்காவல், சம்மன் சர்வ் செய்வதற்கு, தனிப்படை, கலால் என பல்வேறு பணிகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால், காவல் நிலையத்தில் 20 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இந்த காவல் நிலைய எல்லையில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. சங்கராபுரம் பகுதியில் மக்கள் தொகை இரு மடங்கு அதிகரித்துள்ளது. தகராறு, விபத்துகள், கொள்ளை, கொலை சம்பவங்கள் நடைபெறும் போது, காவலர்களை சம்பவ இடத்திற்கு அனுப்புவதில் சிக்கல் எழுகிறது.
பிரிட்டீஷ் காலத்தில் அப்போதைய மக்கள் தொகை கணக்கின்படிநியமிக்கப்பட்ட காவலர்கள் தான் இன்று வரை தொடர்கிறது. பணியில் இருக்கும் சொற்ப அளவிலான காவலர்களும் கட்சிகளின் பொதுக்கூட்டம், தலைவர்கள் வருகை, கோவில் திருவிழாக்கள் என வெளியே சென்று விட்டால் காவல் நிலையத்தில் ரைட்டரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலைதான் தொடர்கிறது.
காவல் நிலையத்தில் காலர்கள் பற்றாக்குறையை தவிர்க்க எஸ்.பி., நடவடிக்கை எடுத்து கூடுதல் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.