/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முற்றுகை போராட்டம்: 32 பேர் கைது
/
முற்றுகை போராட்டம்: 32 பேர் கைது
ADDED : மார் 07, 2025 07:06 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்த்தும், மும்மொழி திட்டத்தை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்திற்கு நிதி எனும் மத்திய அமைச்சரின் பேச்சை கண்டித்தும், நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஜய், பொருளாளர் சிவராமன், மாநில பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் சரவணன் போராட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, போராட்டக்குழுவினர் நான்கு முனை சந்திப்பில் இருந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, ஊர்வலமாக சென்று, ஸ்டேட் பாங்க்கை முற்றுகையிட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட, 32 பேரை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து மாலையில் விடுவித்தனர்.