/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெள்ளி கொலுசு திருட்டு: போலீஸ் விசாரணை
/
வெள்ளி கொலுசு திருட்டு: போலீஸ் விசாரணை
ADDED : பிப் 28, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி,; வரஞ்சரம் அருகில், வெள்ளி கொலுசை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வரஞ்சரம் அடுத்த முகமதியார்பேட்டையைச் சேர்ந்தவர் ஜாபர்அலி மனைவி ஆஷியா பானு, 45; கடந்த, 27ம் தேதி இரவு குடும்பத்தினருடன் துாங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு, 2:15 மணியளவில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தார். அப்போது, வீட்டின் வெளிக்கதவு திறந்திருந்தது.
சந்தேகம் அடைந்தவர், பீரோவை திறந்து பார்த்தபோது, 100 கிராம் கொண்ட வெள்ளிக்கொலுசு திருடு போனது தெரிந்தது. புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.