ADDED : மார் 05, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தம்பியைத் தாக்கிய அக்காவை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 45; இவர் கடந்தாண்டு அக்டோபர் 18ம் தேதி மாலை 4:00 மணிக்கு வீட்டில் இருந்தபோது, முன்விரோதம் காரணமாக அவரது அக்கா சன்னியாசி மனைவி பார்வதி, 47; தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து பார்வதியை கைது செய்தனர்.