/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தம்பியுடன் தகராறு சகோதரி தற்கொலை
/
தம்பியுடன் தகராறு சகோதரி தற்கொலை
ADDED : ஜூலை 02, 2024 06:20 AM
கள்ளக்குறிச்சி: கீழ்குப்பம் அருகே செல்போன் பயன்படுத்தும் போது தம்பியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அக்கா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னசேலம் தாலுகா, தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகள் சுந்தரிதேவி,14; இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக சிறுமி சுந்தரிதேவிக்கும், அவரது தம்பிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சுந்தரிதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துாக்கு போட்டுள்ளார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சுந்தரிதேவியை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சுந்தரிதேவி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.