/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அத்தியாவசிய பொருட்கள் கடத்தல்; கலெக்டர் எச்சரிக்கை
/
அத்தியாவசிய பொருட்கள் கடத்தல்; கலெக்டர் எச்சரிக்கை
அத்தியாவசிய பொருட்கள் கடத்தல்; கலெக்டர் எச்சரிக்கை
அத்தியாவசிய பொருட்கள் கடத்தல்; கலெக்டர் எச்சரிக்கை
ADDED : மார் 09, 2025 11:57 PM
கள்ளக்குறிச்சி; மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை கடத்துவது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கலெக்டர் பிரசாந்த் எச்சரித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, மானிய விலையில் சர்க்கரை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கும் பொருட்களை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்தல், பதுக்குதல் மற்றும் கடத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது.
அது சமூகத்திற்கு எதிரான குற்றம். இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீதுகுற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.