/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குரு பகவானுக்கு சிறப்பு அபிேஷகம்
/
குரு பகவானுக்கு சிறப்பு அபிேஷகம்
ADDED : ஏப் 30, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு அபிேஷகம் நாளை நடக்கிறது.
ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரகங்களின் அதிபதியான குருபகவான், மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நாளை (1ம் தேதி) மாலை 5:19 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது.

