/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

ADDED : ஜூலை 29, 2024 05:02 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
கள்ளக்கறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, திருநங்கைகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 28 மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கி, அரசின் அனைத்து திட்டங்களும் திருநங்கைகளுக்கு நுாறு சதவீதம் சென்று சேர்வதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முகாமில் திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர்(நிர்வாகம்) ரங்கநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட திட்ட அலுவலர் சாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.