/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருநங்கைகளுக்கு 21ம் தேதி சிறப்பு முகாம்
/
திருநங்கைகளுக்கு 21ம் தேதி சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 14, 2024 07:04 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 21ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் பொருட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் வரும் 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில் அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, பான் கார்டு ஆகியவை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் திருநங்கைகளுக்கு சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.