/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சேமிப்பு கணக்கு தொடங்க பள்ளிகளில் சிறப்பு முகாம்
/
சேமிப்பு கணக்கு தொடங்க பள்ளிகளில் சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 06, 2024 05:34 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், அஞ்சல் அலுவலகம் சார்பில் புதிய சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடக்கிறது.
விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அஞ்சல் அலுவலகம் புதிய சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அரசு சார்பில் வழங்கப்படும் உதவி மற்றும் ஊக்கத் தொகையினை மாணவ, மாணவிகள் பெற வசதியாக இம்முகாம் நடக்கிறது.
சேமிப்பு கணக்கு தொடங்க குறைந்தபட்ச வைப்புத்தொகை ஏதுமில்லை. 10 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், 2 புகைப்படம் மற்றும் பான்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து சேமிப்பு கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை கொண்டு கணக்கினை துவங்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.