ADDED : செப் 29, 2026 05:42 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பெரிய சிறுவத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசஸ்வரி ராஜபிரியா தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர்கள் முருகன், ஜெயசந்திரன், செந்தில்ராஜா, கலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமினை மேலுாரை் சேர்ந்த பிரமுகர்கள் ராமர், மதிவாணன், பிரகாஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தை துாய்மை படுத்துதல், மேலுார் கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, பசுமை நாயகன் விருது பெற்ற பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சாமிதுரை தலைமையில் மேலுார் ஏரிக்கரையில் 500 பனை விதைகளை மாணவர்கள் நட்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மணிகண்டன் மேற்பார்வையில் மாணவர்கள் பணிகளை மேற்கொண்டனர்.
