/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் சிறப்பு கட்டண சலுகை
/
முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் சிறப்பு கட்டண சலுகை
முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் சிறப்பு கட்டண சலுகை
முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் சிறப்பு கட்டண சலுகை
ADDED : ஜூன் 01, 2024 06:22 AM

கள்ளக்குறிச்சி : மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில், வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
இது குறித்து கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா கூறியதாவது:
முருகா பாலிடெக்னிக் கல்லுாரியல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் (பகுதி நேரம்) பாடப்பிரிவுகள் உள்ளது.
கல்லுாரியின் வெள்ளி விழா ஆண்டையொட்டி, இந்த ஆண்டு கல்லுாரியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பருவ கட்டணம் 50 சதவீதம் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக தொழிற்கல்வி சேவையில் முக்கிய பங்காற்றி வரும் இக்கல்லுாரி மிகச்சிறந்த ஆய்வகங்கள், கட்டடங்கள், நுாலகம் கொண்டுள்ளது.
அரசு தேர்வுகளில் 700க்கு 700 மதிப்பெண்கள் பெற்று பல மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்து வருகின்றனர். மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி பயிலவும் மற்றும் கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
இக்கல்லுாரியில் பயின்ற மாணவ மாணவிகள் இதுவரை 15 ஆயிரத்திற்கும் 26க்கும் மேற்பட்டோர் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்று சாதனை புரிந்துள்ளனர். பல மாணவர்கள் வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
அனைத்து வழித்தடங்களிலும் கிராமப்புற மாணவர்கள் வந்து செல்ல கல்லுாரி பஸ்கள் இலவசமாக இயக்கப்படுகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தொழிற்கல்வி பயிலும் விதத்தில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பகுதிநேர பாடப்பிரிவு சிறப்பாக செயல்படுகிறது.
மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டிகள், தனித்திறன்களை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் ஆண்டு விழா, சுற்றுலா, தொழிற்சாலைகளை பார்வையிடுதல் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.