/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிவன் கோவில்களில் சிவராத்தி சிறப்பு பூஜை
/
சிவன் கோவில்களில் சிவராத்தி சிறப்பு பூஜை
ADDED : பிப் 27, 2025 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; சின்னசேலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரிஸ்வரருக்கு சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மா, தேவர்கள், மகாவிஷ்ணு, அம்பிகை, பூதகணங்கள், மக்கள் நல்வாழ்வுக்கு என ஆறு கால சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மகாதீபாரதனை நடந்தது.
சிறுபாக்கம் கமலசோளீஸ்வரர் கோவிலில் உத்தரகாண்ட பூஜையும், ராயப்பனுார் கைலாசநாதருக்கு நான்கு கால பூஜையும், உலகியநல்லுார் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.