/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி: கலெக்டர் தகவல்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி: கலெக்டர் தகவல்
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி: கலெக்டர் தகவல்
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி: கலெக்டர் தகவல்
ADDED : ஜூலை 08, 2024 05:07 AM
கள்ளக்குறிச்சி: நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாட்களைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்வளர்ச்சித் துறையால் மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 23, 24ம் தேதிகளில் காலை 9:30 மணி முதல் தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேச்சுப்போட்டி நடக்கிறது.
இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை 2,000 ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களின் பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் நடத்தி மாணவர்களை தேர்வு செய்து, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க சி.இ.ஓ., வழியாகவும், கல்லுாரி போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லுாரிகளின் முதல்வர்கள் வழியாகவும் நேரிலோ, அஞ்சலிலோ அல்லது tamildevelopmentvpm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ வரும் 19ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
இந்த போட்டிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.