/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏமப்பேர் குளத்தில் தண்ணீர் நிரப்பி படகு சவாரி துவக்கம்; கள்ளக்குறிச்சி நகராட்சி ஏற்பாடு

ADDED : மே 28, 2024 11:18 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதி நகராட்சி குளத்தில் தண்ணீர் குறைந்து, படகு சவாரி செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்த தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டடதை தொடர்ந்து தண்ணீர் நிரப்பி படகு சவாரி துவங்கியுள்ளது.
மாவட்டத்தின் தலைநகரமாக உள்ள கள்ளக்குறிச்சியில் மக்களின் பொழுது போக்கிற்காக இருப்பது ஏமப்பேர் படகு சவாரி குளம் மற்றும் அதில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர்கள் நீச்சல் குளம், நடைபாதை ஆகியவை மட்டுமே ஆகும். ஆனால் இந்த குளத்தில் இவ்வாண்டின் கோடை வெயிலின் உச்சத்தால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து போனது. இதனால் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது இந்த குளத்தில் நகராட்சி சார்பில் தண்ணீர் நிரப்பி, படகு சவாரியை மீண்டும் முழுவீச்சில் துவக்கி உள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் உற்சாகத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.