தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாநில அளவிலான கரும்பு மகசூல் போட்டி

மாநில அளவிலான கரும்பு மகசூல் போட்டி

மாநில அளவிலான கரும்பு மகசூல் போட்டி


ADDED : செப் 05, 2024 09:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2024 09:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டாரத்தில் மாநில அளவிலான கரும்பு பயிர் மகசூல் போட்டிக்கு பதிவு செய்த கரும்பு வயலை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சங்கராபுரம் வட்டம் மஞ்சபுத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கோ 86032 என்ற இரகம் மாநில அளவிலான பயிர் மகசூல் போட்டிக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வயலை திருப்பத்துார் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி, கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் விஜயராகவன், ஆகியோர் ஆய்வு செய்தனர். பின் கரும்பு அறுவடை நடந்தது.

இந்த அறுவடையின் போது சங்கராபரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன்,துணை வேளாண்மை அலுவலர் முருகேசன்,உதவி விதை அலுவலர் சிவசங்கர், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் வல்லரசு, விவசாய பிரதிநிதி கணேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us