/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அதீநவீன கேத்லேப், லேசர் வசதியுள்ள ராஜூ இருதயம், தோல் மருத்துவமனை
/
அதீநவீன கேத்லேப், லேசர் வசதியுள்ள ராஜூ இருதயம், தோல் மருத்துவமனை
அதீநவீன கேத்லேப், லேசர் வசதியுள்ள ராஜூ இருதயம், தோல் மருத்துவமனை
அதீநவீன கேத்லேப், லேசர் வசதியுள்ள ராஜூ இருதயம், தோல் மருத்துவமனை
ADDED : ஆக 02, 2024 02:30 AM

கள்ளக்குறிச்சிமாவட்டத்தில், அதீநவீன கேத்லேப் வசதியுள்ள இருதய சிகிச்சை மற்றும் லேசர் வசதியுடன் கூடிய முதல் தோல் சிகிச்சை மையம் ராஜூ இருதயம், தோல் மருத்துவமனையில் உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த 1981ல் டாக்டர்கள் கண்ணன் - சுகந்தி ஆகியோரால் துவங்கப்பட்டு, ஏழைகளின் சேவையில் சிறந்து விளங்கி வருகிறது. இங்கு 2000க்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ்மேக்கர் சிகிச்சைகள் முடித்து சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் என்.ஏ.பி.எச்., தரச்சான்றிதழ் பெற்ற இந்த மருத்துவமனையை, இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பாபு சக்கரவர்த்தி மற்றும் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் இந்துபாலா ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
இங்கு 24 மணிநேர அவசர இருதய சிகிச்சை பிரிவு உள்ளது. இருதயம் தொடர்பான அனைத்து பரிசோதனைகள், நுண்துளை ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ்மேக்கர் பொருத்துதல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
முதல்வர் காப்பீடு திட்டம், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், அரசு ஊழியர் நலத்திட்டம், ஓய்வூதியர் நலத்திட்டம், எஸ்.பி.ஐ இன்சூரன்ஸ், சோலா எம்.எஸ். இன்சூரன்ஸ், ரிலையன்ஸ் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஹெல்த் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பணமில்லா சிகிச்சைகள் விரிவாக அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இங்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இருதய நோய், மூச்சிறைப்பு, மயக்கம் உள்ளவர்களுக்கான இருதய நோய் கண்டறியும் மாஸ்டர் கார்டியாக் ஹெல்த் செக்-அப் இங்கு செய்யப்படுகிறது.
ராஜூ தோல் சிகிச்சை மையத்தில், 16 ஆண்டுகால அனுபவம் கொண்ட டாக்டர் இந்துபாலா தோல் நோய், நகம், முடி பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். விடிலிகோ, சோரியாசிஸ் போன்ற தோல் பிரச்னைகளுக்கு அதிநவீன போட்டோதெரபி எக்சைமர் லேசர் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
தேவையற்ற முடி, கரும்புள்ளி, பரு தழும்புகள், டாட்டூ, மச்சம், மரு ஆகியவற்றை அகற்றவும் லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காது மடல் தைத்தல் போன்ற காஸ்மெடாலஜி மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.
வழுக்கை, முடி உதிர்தலுக்கு பி.ஆர்.பி.,ஜி.எப்.சி., ஸ்டெம் செல் மற்றும் பையோலைட் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில், உயர்தர கல்வியினை பெற ஸ்ரீராஜூ பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட் இந்த கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது.