/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வரி போட்டு கொள்ளை அடிக்கின்றனர் பா.ஜ., மீது மா.கம்யூ., மாநில செயலாளர் பாய்ச்சல்

ADDED : ஏப் 09, 2024 06:09 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் 'இண்டியா' கூட்டணி வி.சி., வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஓட்டு கேட்டு மா.கம்யூ., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., திருநாவுகரசு, ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், வசந்தவேல், முருகன், நகர செயலாளர் டேனியல்ராஜ், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், கம்யூ., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
சமூக நீதி என் மூச்சு, இட ஒதுக்கீடு என் லட்சியம் என கூறும் பா.ம.க., ராமதாஸ், இட ஒதுக்கீடே கிடையாது என கூறும் பா.ஜ.,வோடு கூட்டணி வைத்திருப்பது நியாயமா.
பா.ஜ., ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. பஞ்சுக்கு ஒரு வரி, பஞ்சிலிருந்து நுாலாக மாறும்போது அதற்கு ஒரு வரி. நுாலில் இருந்து சட்டையாக மாறும்போது அதற்கு ஒரு வரி என ஜி.எஸ்.டி., வரியை விதித்துள்ளனர். டீ, காபிக்கு என அனைத்துக்கும் வரி போட்டு கொள்ளை அடிக்கின்றனர்.
எனவே விலைவாசியை கட்டுப்படுத்துவும், மக்களைக் காப்பாற்றவும் 'இண்டியா' கூட்டணியை வெற்றி பெற வைக்க வி.சி., வேட்பாளருக்கு பானை சின்னத்தில் ஓட்டு போட்டு மகத்தான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.