ADDED : செப் 22, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
சின்னசேலம்: சின்னசேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்த எம்.ஜி.ஆர்., சிலை புதிய இடத்தில் அமைப்பதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டது.
சின்னசேலத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதால், பஸ் நிலையம் அருகே இருந்த எம்.ஜி.ஆர்., சிலை இப்பணிக்கு இடையூறாக உள்ளது. அதனால், சிலையை மாற்று இடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ., ராகேஷ், கலெக்டர் பத்மஜா, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் ராதாகிருஷ்ணன், சின்னசேலம் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் கார்த்திக், தாசில்தார் கனகபூரணி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் கவுன்சிலர்கள் அலுவலர்கள் ஆகியோர் கடைவீதி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு கலந்தாய்வு செய்தனர்.
