/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை
/
ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : ஆக 05, 2024 12:21 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சிப்பட்டு ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சிப்பட்டு ஏரி மூலம் அப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால், இப்பகுதியில் சிலர் ஏரியை ஆக்கிரமித்து ஒரு சில விவசாயிகளே விவசாயம் செய்து, நாளுக்கு நாள் ஏரியின் பரப்பளவை குறைத்துக் கொண்டே வருகின்றனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பவுஞ்சிப்பட்டு ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.