ADDED : மே 24, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே காணாமல் போன கல்லுாரி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன் மகள் கவிபாரதி 21; இவர், அப்பகுதியில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி கல்லுாரிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மஞ்சுநாதன் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்.