/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எலி மருந்து சாப்பிட்ட மாணவர் பலி
/
எலி மருந்து சாப்பிட்ட மாணவர் பலி
ADDED : செப் 01, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே வடமாமந்துார் கிராமத்தில் எலி மருந்து சாப்பிட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடமாமந்துாரைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சந்தோஷ்குமார், 18; இவர் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், திருவண்ணாமலையில் தனியார் தொழில்நுட்பக் கல்லுாரியில் சேர்த்தனர்.
இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டுள்ளார்.உடன், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.