ADDED : ஜூலை 15, 2026 05:42 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த டி.முடியனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் வசதி துவக்க விழா நடந்தது.
மாணவர்களை பாதுகாப்பான வகையில் பள்ளிக்கு அழைத்து வருவது மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான வசதியை மேம்படுத்தும் நோக்கில், திருக்கோவிலுார் அடுத்த டி. முடியனுர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அதற்கான துவக்க விழா நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன், வட்டார கல்வி அலுவலர் வேணுகோபால் தலைமை தாங்கி மாணவர்களுக்கான போக்குவரத்து வாகன வசதியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். தலைமை ஆசிரியர் மிருதுளா தேவி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் பவுல் இருதயராஜ் நன்றி கூறினார்.
