ADDED : பிப் 22, 2025 10:15 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரி, ரோட்டரி சங்கம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் ராஜேந்திரன், துணை ஆளுநர் ராமலிங்கம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் பாபு, முன்னாள் தலைவர் சசிகுமார், கல்லுாரி முதல்வர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் விஜயராஜ் வரவேற்றார்.
முகாமை, கல்லுாரி தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக்ஷ் துவக்கி வைத்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, மாணவர்கள் ரத்ததானத்தின் அவசியம் குறித்து விளக்கினர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் விஜயகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர், 60 மாணவர்களிடம் ரத்ததானம் பெற்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி துணை முதல்வர் முகமதுசபீக் நன்றி கூறினார்.