/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஐ.டி.ஐ., முதல்வர் கார் பழுது 3 கி.மீ., தள்ளி சென்ற மாணவர்கள்
/
ஐ.டி.ஐ., முதல்வர் கார் பழுது 3 கி.மீ., தள்ளி சென்ற மாணவர்கள்
ஐ.டி.ஐ., முதல்வர் கார் பழுது 3 கி.மீ., தள்ளி சென்ற மாணவர்கள்
ஐ.டி.ஐ., முதல்வர் கார் பழுது 3 கி.மீ., தள்ளி சென்ற மாணவர்கள்
ADDED : மார் 11, 2025 05:29 AM

கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டையில், சார்ஜ் இல்லாமல் நின்ற அரசு ஐ.டி.ஐ., முதல்வரின் எலக்ட்ரிக் காரை மாணவர்கள் 3 கி.மீ., துாரம் தள்ளி சென்றனர்.
உளுந்துார்பேட்டை அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சீனிவாசன். இவர், விழுப்புரத்தில் இருந்து நேற்று உளுந்துார்பேட்டை ஐ.டி.ஐ.,க்கு எலக்ட்ரிக் காரில் வந்தார். உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வந்தபோது, சார்ஜ் இல்லாமல் கார் நின்றது.
இதையடுத்து, காரை அங்கேயே நிறுத்திவிட்டு முதல்வர் சீனிவாசன் ஐ.டி.ஐ.,க்கு வந்தார். இதையடுத்து, மாலை 4:00 மணியளவில், மாணவர்கள் சிலர் காரை, ஐ.டி.ஐ., வரை 3 கி.மீ., துாரத்திற்கு தள்ளிக்கொண்டு வந்தனர். இதனால், மாணவர்கள் சோர்வடைந்தனர்.
காரை மாணவர்கள் தள்ளிச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.