/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை விபத்துகளை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம்
/
சாலை விபத்துகளை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம்
ADDED : மார் 03, 2025 07:26 AM

கள்ளக்குறிச்சி : சாலை விபத்துகளைக் தடுத்து விபத்தில்லா மாவட்டமாக உருவாக்குவதற்கான ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எஸ்.பி., ரஜத் சதுர்வேதி, டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்த் குமார்சிங், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து, தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், கச்சிராயப்பாளையம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கள்ளக்குறிச்சி நகர பகுதிக்குள் செல்லாமல் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
புறவழிச்சாலை விபத்து பகுதிகளை கண்டறிதல், நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றல், மேம்பாலம், சேவை சாலை அமைத்து, விபத்து ஏற்படும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்தல், நெரிசல் இடங்கள் மற்றும் மின்விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்புத் தடுப்புகள் அமைத்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதை உறுதி செய்ய அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.