/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிறிஸ்தவ தேவாலய பணியாளர்களுக்கு நல வாரிய திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
/
கிறிஸ்தவ தேவாலய பணியாளர்களுக்கு நல வாரிய திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
கிறிஸ்தவ தேவாலய பணியாளர்களுக்கு நல வாரிய திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
கிறிஸ்தவ தேவாலய பணியாளர்களுக்கு நல வாரிய திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
ADDED : மார் 15, 2025 06:31 AM

கள்ளக்குறிச்சி; கிறிஸ்தவ தேவாலய பணியாளர்களுக்கு செயல்படுத்தும் நலவாரிய திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கிறிஸ்தவ தேவாலய உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய தலைவர் விஜிலா சத்தியானந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ஜீவா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நல வாரிய திட்டங்கள், திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடந்தது.
தொடர்ந்து நல வாரிய உறுப்பினர் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பழமையான கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுதுபார்த்தல். புனரமைத்தல் பணிகளுக்கு, 20 லட்சம் ரூபாய் வரை அரசு நிதியுதவி வழங்கப்பட இருப்பதால் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும், கல்லுாரி மாணவர்கள் விண்ணப்பித்து கடனுதவி பெறலாம்.
கல்லறைத் தோட்டம் அமைக்க தேவையான இடங்களை தேர்வு செய்து பட்டா, மின்சார வசதிக்கு நடவடிக்கை எடுக்கலாம் என எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து 2 பேருக்கு தையல் இயந்திரம், 16 பேருக்கு நல வாரிய அட்டை, ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.