/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாட்கோ மூலம் இரு பட்டியலின பெண்களுக்கு மானியத்துடன் நிலம்
/
தாட்கோ மூலம் இரு பட்டியலின பெண்களுக்கு மானியத்துடன் நிலம்
தாட்கோ மூலம் இரு பட்டியலின பெண்களுக்கு மானியத்துடன் நிலம்
தாட்கோ மூலம் இரு பட்டியலின பெண்களுக்கு மானியத்துடன் நிலம்
ADDED : செப் 01, 2024 10:50 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் நிலம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மானியத்துடன் விவசாய நிலம் வாங்குவதற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது.
நிலமற்ற பட்டியலின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்ட தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
அதன்படி தாட்கோ மூலம் கடனுதவி பெற்ற சங்கராபுரம் அடுத்த பிரிவுடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவருக்கு 1.36 ஏக்கரும், அன்பு என்ற பெண்ணுக்கு 1.97 ஏக்கர் நிலமும் மானியத்துடன் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பெண்களை நில உடைமையாளர்கள் ஆக்குவதை இலக்காக கொண்டிருப்பதாக மாவட்ட தாட்கோ மேலாளர் பெர்விலின் தெரிவித்தார்.