/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஆக 17, 2024 03:23 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் தண்டலை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.ஆர்.சி., உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை உயர்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ், பசுமைப்படை மாணவர்கள் 50 பேர்களுக்கு ரூ.11 ஆயிரம் மதிப்பிலான ஜே.ஆர்.சி., உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ரோட்டரி மண்டல தேர்வு ஆளுநர் செந்தில் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் தனபால் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் தேவகி, ரோட்டரி மண்டல துணை ஆளுநர் ராமலிங்கம், ரோட்டரி முன்னாள் தலைவர்கள் ஞானராஜ், சங்கர், இம்மானுவேல் சசிகுமார், உதயகுமார், செயலாளர் சிவக்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.