/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கல்
/
மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கல்
ADDED : ஆக 08, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சங்கராபுரம் ரோட்டரி சார்பில் கண் கண்ணாடி வழங்கும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ரோட்டரி தலைவர் அசோக்குமார், செயலாளர் சங்கர், முன்னாள் தலைவர்கள் நடராஜன்,சுதாகரன், பிரகாஷ்,கோவை சங்கரா கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் செந்தில் முன்னிலை வகித்தனர்.
உதவி தலைமை ஆசிரியர் மதிய ழகன் வரவேற்றார். பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு கண் கண்ணாடியை ரோட்டரி தலைவர் அசோக்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.