/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு விதைப்பண்ணையில் வேளாண் இயக்குநர் ஆய்வு
/
அரசு விதைப்பண்ணையில் வேளாண் இயக்குநர் ஆய்வு
ADDED : ஜூன் 28, 2024 11:12 PM

கள்ளக்குறிச்சி ; வடக்கனந்தல் மாநில அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை துணை இயக்குநர் (திட்டம்) பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
கச்சிராபாளையம் அடுத்த வடக்கனந்தல் அரசு விதைப் பண்ணையில் தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக உற்பத்தி செய்யப்படும் நொச்சி மற்றும் ஆடாதொடா செடிகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் 45,000 நொச்சி மற்றும் ஆடாதொடா செடிகளை விரைந்து உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். ஏடிடி57 விதைப்பண்ணை வயல்களை ஆய்வு செய்து உரிய பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை விதைப்பண்ணை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
ஆய்வின் போது வேளாண்மை அலுவலர் (பண்ணை நிர்வாகம்) ராஜா உடனிருந்தார்.