ADDED : ஜூன் 01, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
ரிஷிவந்தியம்: வாணாபுரம் தாசில்தாராக நளினி பொறுப்பேற்று கொண்டார்.
வாணாபுரம் தாசில்தாராக பணிபுரிந்த வெங்கடேசன், கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவில் பணிபுரிந்த நளினி வாணாபுரத்திற்கு பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக நளினி நேற்று பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து, தாலுகா அலுவலக பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் ஆகியோர் தாசில்தார் நளினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
