/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
/
தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
ADDED : மார் 11, 2025 04:06 AM
திருக்கோவிலுார: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு பிராமணர் சங்க, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் தேர்தல், திருக்கோவிலுாரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீ குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாவட்ட தேர்தல் அதிகாரி வெங்கட்ராமன் மேற்பார்வையில் நடந்த தேர்தலில் திருக்கோவிலுார் முரளிதரன் மாவட்ட தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
துணைத் தலைவர் கள்ளக்குறிச்சி சிவகுமார், பொதுச் செயலாளர் பரிக்கல் வெங்கட்ராமன், பொருளாளர் சங்கராபுரம் ஜெயக்குமார், இளைஞரணி செயலாளர் கள்ளக்குறிச்சி சீனிவாசன், மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி காயத்ரி தேர்வு செய்யப்பட்டனர்.