/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை
/
தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை
தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை
தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை
ADDED : மே 26, 2024 06:05 AM
கள்ளக்குறிச்சி: தமிழக சிறப்பாசிரியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். நிர்வாகி வரதராஜன் வரவேற்றார்.
மாநில பொதுச்செயலாளர் ராமகேசவன், பொருளாளர் ஆனந்தகுமார், இணை செயலாளர் கவாஸ்கர் சிறப்புரையாற்றினர். மாநில தலைவர் முரளி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கூட்டத்தில், கடந்த 12 ஆண்டுகளாக எவ்வித பலனுமின்றி சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பகுதி நேர ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தல், கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதியை முதல்வர் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.