/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேச்சு
/
தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேச்சு
தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேச்சு
தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேச்சு
ADDED : ஏப் 07, 2024 05:45 AM

கள்ளக்குறிச்சி : 'பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் தி.மு.க.,வுக்கு தக்கபாடம் புகட்ட வேண்டும்' என அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேசினார்.
கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, சின்னசேலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, ஏர்வாய்ப்பட்டினம், கடத்துார், நல்லாத்துார், குதிரைச்சந்தல் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, பெண்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், மலர்துாவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.
வேட்பாளர் குமரகுரு பேசுகையில், 'சட்டசபை தேர்தலின் போது நீட் ரத்து, அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை போன்ற பல்வேறு பொய்யான வாக்குறுதிகள் அளித்து தி.மு.க.,வினர் மக்களை ஏமாற்றினர்.
இதனால் தி.மு.க.,வினர் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தற்போதும் பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களுக்கு ஏமாற்றி விடலாம் என்ற மனக்கணக்கில் உள்ளனர். மக்களை ஏமாற்றும் தி.மு.க.,வினருக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். எனவே, தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.
முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, ஜெ., பேரவைச் செயலாளர் மாவட்ட செயலாளர் ஞானவேல், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், வழக்கறிஞரணி செயலாளர் சீனுவாசன், பாசறை செயலாளர் வினோத் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

