நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, கல்லுாரி தாளாளர் மனோகர்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். மாணவி பவித்ரா வரவேற்றார். மாணவி குருஏஞ்சல் டெய்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்லுாரி முதல்வர் லதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் வாழ்த்திப் பேசினார்.
விழாவில், ஆசிரியர் பணியின் சிறப்புகள் குறித்து கருத்துரை வழங்கப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்கள் அனைவருககும் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.